வணிக வலைத்தளத்தை உருவாக்குங்கள்

இந்த 4 ஐ செய்வதன் மூலம் உங்கள் வியாபாரத்தை அதிகரிக்கலாம்

அனைத்து விதமான வணிக பயன்பாட்டு வலைத்தளங்களையும் நாங்கள் வடிவமைக்கிறோம்.

நிலை 1

கவர்ச்சிகரமான வலைத்தளத்தை வடிவமைக்கவும்

நிலை 2

உங்கள் வாடிக்கையாளரை ஈர்க்கவும்

நிலை 3

அதிக லீட்களைப் பெறுங்கள்

நிலை 4

விற்பனையை அதிகரிக்கவும்

நிலை 1

கவர்ச்சிகரமான வலைத்தளத்தை வடிவமைக்கவும்
நாங்கள் உங்கள் வலைத்தளத்தை வாடிக்கையாளரின் ரசனைக்கேற்ப வடிவமைத்து தருகின்றோம்.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையத்தில் தேடுகின்றனர் அதில் நிறைய வணிகர்கள் அதை விற்பதை பார்க்கிறார்கள் ஆனால் சில வணிகர்களிடம் மட்டுமே பெரும்பாலும் பலமுறை வாங்குகின்றனர்.

காரணம் தங்களுக்கு தேவையான பொருட்களின் அனைத்து விபரங்களும் சரியான முறையில் பார்த்தவுடனே புரியும் வகையில் தகவல்களை கொடுப்பது அந்த ஒரு சிலர் மட்டுமே அதனால்தான் அங்கு அந்த தேடுதல் விற்பனையில் முடிகிறது. வணிகம் நடைபெறுகிறது.

வாடிக்கையாளரின் தேடுதலுக்கேற்ப விற்பனை பொருட்களின் விபரங்களை கொண்டு சேர்ப்பதில் தான் உள்ளது. நாங்கள் உங்கள் வலைத்தளத்தை வாடிக்கையாளரின் ரசனைக்கேற்ப வடிவமைத்து தருகின்றோம்.

நிலை 2

உங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும்
வாடிக்கையாளர்களை உங்கள் வலைத்தளத்தை பார்க்க வைப்பதுதான் எங்கள் வேலை

வலைத்தளத்தை துவங்குவதோடு வணிகர்களின் பணி முடிவதில்லை. வலைத்தளம் என்பது அவர்களின் ஆன்லைன் விலாசம் மட்டுமே.

இப்பொழுது உங்களிடம் வலைத்தளம் உள்ளது அதில் சில பொருட்கள் விற்பனைக்கு மிகவும் அழகான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களை இந்த வலைத்தளத்திற்கு அழைத்து வ்ருவதுதான் இதன் இரண்டாம் படிநிலை.

இதற்கு கூகுள் தேடுதல் தளம் மற்றும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் போன்ற மக்கள் அதிகம் வந்து செல்லும் தளங்களில் நம்முடைய வலைத்தளம் பற்றிய விலாசங்களை விளம்பரம் செய்ய வேண்டும்.

நிலை 3

அதிக லீட்களைப் பெறுங்கள்
விளம்பரங்களை இயக்குவது மூலம் நீங்கள் மேலும் அதிக அளவில் லீடுகளை பெறுவீர்கள்

வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்ய சுலபமாகவும், வணிகர்களை தொடர்பு கொள்ளவும் சில படிவங்களை வலைதளத்தில் வைத்திருப்போம்

வாடிக்கையாளர்கள் நிரப்பும் படிவங்கள், தகவல்களாக சர்வர் சேமித்து வைத்துக்கொள்ளும்.

அந்த தகவல் தான் விற்பனைக்கான லீட்ஸ். அதை தங்களுக்கான பிரத்யேக லாகின் செய்வதன் மூலம் நீங்கள் பார்க்க முடியும்

விளம்பரங்களை இயக்குவது மூலம் நீங்கள் மேலும் அதிக அளவில் லீடுகளை பெறுவீர்கள்

நிலை 4

விற்பனையை அதிகரிக்கவும்
லீடுகளை எளிதாக கையாள்வதற்கான அட்மின் பேனல் மற்றும் ஆட்டோமேட்டட் எஸ்.எம்.எஸ் போர்டல்களை நாங்கள் வழங்குகிறோம்.

சில வாடிக்கையாளர்கள் தானாகவே ஆன்லைனில் பணம் செலுத்தி ஆர்டர் செய்து விடுவார்கள்

சிலர் ஆர்டர் செய்துவிட்டு பணம் கட்டாமல் ஆர்டர் முழுமை பெறாமல் பாதியில் விட்டு விடுவார்கள்

சிலர் தங்கள் கருத்துக்களை மட்டும் பகிர்ந்து விட்டு சென்று விடுவர், சிலர் தங்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசி விடுவார்கள், சிலர் ஆஃபர்களை எதிர்பார்த்து காத்துகொண்டு இருப்பார்கள்,

இப்படியான பலவிதமான விற்பனைக்கான லீட்ஸ் தற்பொழுது உங்கள் கைகளில் உள்ளது

தற்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது இந்த லீடுகளை வைத்துக்கொண்டு விற்பனை சதவிகிதத்தை அதிகரிப்பதுதான்.

அனைத்தும் ஒரே இடத்தில்

டொமைன், ஹோஸ்டிங்,எஸ்.எஸ்.எல், எஸ்.எம்.எஸ் சேவை என அனைத்தும் தங்கள் கன்ட்ரோலில் வைத்துகொள்ளும் சேவையை காக்ஸான் வழங்குகிறது

டொமைன்
வலைதள பெயரை ரிஜிஸ்டர் செய்து தங்கள் கன்ட்ரோலில் வைத்துகொள்ளும் சேவை.
எஸ்.எம்.எஸ்
என்.டி.டி, 6 இலக்க சென்டர் ஐடி ரிஜிஸ்டர் மற்றும் ஆட்டோமேட்டட் எஸ்.எம்.எஸ் சேவைகள்
லோகோ டிசைன்
உங்களுக்கான பிரத்யேக தனித்த அடையாள லோகோ வடிவமைப்புகளை உருவாக்குகிறோம்.
ஹோஸ்டிங்
தங்கள் வலைத்தளத்திற்கு ஏற்ற எளிதாக மேம்படுத்தக்கூடிய ஹோஸ்டிங் பிளான்ஸ்
அட்மின் பேனல்
மேம்படுத்தப்பட்ட லீட்ஸ் ரிப்போர்ட்ஸ், அன்லிமிடெட் பயனர்கள், கஸ்டமைஸ்டு பேனல்.
தொடர்பு படிவங்கள்
சப்போர்ட் ஃபார்ம்ஸ் , கான்டாக்ட் ஃபார்ம்ஸ், கஸ்டமைஸ்டு ஃபார்ம்ஸ்களை உருவாக்குகிறோம்.
எஸ்.எஸ்.எல்
வலைதள பாதுகாப்பு சான்றிதழ் மற்றும் கிளவுட் எனகிரிப்ட்சன் பெட்டக அமைப்பு வசதி
பேக்அப்
வலைத்தளத்தை வாரம் ஒருமுறை தானியங்கி பேக்அப் செய்து வைத்துக்கொள்ளும் வசதி

FAQs

உங்களுடைய டொமைன் ஹோஸ்டிங் மற்றும் எஸ்.எஸ்.எல் பிளான்களுக்கு மட்டும் வருடத்திற்க்கு ஒருமுறை நீங்கள் ரெனீவல் செய்ய வேண்டும்
ஆம், கூகுள், மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு அவர்களின் பக்கத்தில் விளம்பரம் செய்திட நீங்கள் அந்தந்த பிரத்யேக போரட்டலில் நீங்கள் செய்ய விரும்பும் விளம்பரங்களுக்கு ஏற்றார் போல் பணம் செலுத்த வேன்டும்.
ஆம், எந்த நேரத்திலும் ஹோஸ்டிங் பிளானை நீங்கள் எளிதாக மேம்படுத்தலாம்.
ஆம், உங்கள் தரவு 100% பாதுகாப்பானது மற்றும் ஒவ்வொரு 7 நாட்களுக்கும் பேக்அப் பிரதி எடுக்கப்படும்.
ஆம், எங்களின் அனைத்து ஹோஸ்டிங் பிளான்களும் அன்லிமிடெட் மின்னஞ்சல் முகவரிகளுடன் வருகின்றன.